Friday, October 17, 2014

காற்று வாங்கப் போவோம்

காற்று வாங்கப் போனால்
கவிதை வாங்கி வரலாம்-இந்தக்
கூற்று மெத்த நிஜமே-இதை
உணர்ந்து தெளிந்தால் நலமே

இல்லந் தன்னில் அனலாய்
எரித்துக்  கொல்லும் தனிமை-தனித்துச்
செல்லும் போது நெஞ்சில்-தானே
பெருக்கித்  தருமே இனிமை

வீட்டுச் சுவற்றில் எங்கும்
ஒட்டி வைத்தச் செய்தி-நமக்கு
நாட்டு நடப்பைச் சொல்லும்-அதனால்
கருவும் தானே சுரக்கும்

மெல்ல விரியும் கதிர்கள்
மலர்ந்து சிரிக்கும் மலர்கள்-காணும்
உள்ளம் நிறைத்துப் போக-கவிதை
ஊற்று பெருகும் தானே

எனவே நாளும்----

காற்று வாங்கப் போவோம்
கவிதை வாங்கி வருவோம்-இந்தக்
கூற்றைச் சொன்ன கவியை -நாளும்
போற்றி நாமும் மகிழ்வோம்

17 comments:

G.M Balasubramaniam said...

சும்மா ஒரு ஜாலிக்கு என்றாலும் நன்றாகவே இருக்கிறது.

Unknown said...

கடைதனில் கிடைக்காத காற்றும் கவிதையும் சார்

கவிஞர்.த.ரூபன் said...
This comment has been removed by the author.
கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

எம்ஜிர் பாடல் போல் கவிதை அமைந்துள்ளது.... அழகிய வரிகள் இரசித்தேன்பகிர்வுக்கு நன்றி த.ம 2வதுவாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான கவிதை! இயற்கையை ரசிக்கையில் இயல்பாய் ஊற்றெடுக்கிறது கவிதை! அருமை! வாழ்த்துக்கள்!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

எளிமையான கவிதை என்றாலும் பொருள் பொதிந்த கவிதை

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

த.ம. 3

கரந்தை ஜெயக்குமார் said...

கண்ணதாசனுக்கு ஓர் சிறப்பான கவிதாஞசலி
நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களின் கவி கண்டு மகிழ்ந்தேன் ஐயா

வெங்கட் நாகராஜ் said...

சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் பக்கத்தில் கவிதைப் பகிர்வு. நன்றி ரமணி ஜி!. தொடர்ந்து சந்திப்போம்.

Yarlpavanan said...

சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

UmayalGayathri said...

மெல்ல விரியும் கதிர்கள்
மலர்ந்து சிரிக்கும் மலர்கள்-காணும்
உள்ளம் நிறைத்துப் போக-கவிதை
ஊற்று பெருகும் தானே //...

முற்றிலும் உண்மை நண்பரே...எனக்கும் இவ்வனுபவம் உண்டு. நன்றி.

சிறப்பான கவிதை.

UmayalGayathri said...

த.ம 5

கோமதி அரசு said...

கண்ணதாசனுக்கு சிறப்பான கவிதாஞ்சலி.
அருமையான் கவிதை.

காரஞ்சன் சிந்தனைகள் said...

//
மெல்ல விரியும் கதிர்கள்
மலர்ந்து சிரிக்கும் மலர்கள்-காணும்
உள்ளம் நிறைத்துப் போக-கவிதை
ஊற்று பெருகும் தானே// இரசித்தேன்! அருமை!

Unknown said...

தாராளமாய் காற்று வாங்கப் போய் கவிதை வாங்கி வரலாம்,அதை கேட்டு வாங்கிப் போக ஒருத்தி வந்தால் தான் பிரச்சினையே )
த ம 6

Thulasidharan V Thillaiakathu said...

அழகான வரிகள்! நாங்க்ள் சொல்ல ந்னைத்ததை பகவான் ஜி சொல்லிவிட்டார்!

சிவகுமாரன் said...

கலக்கல் கவிதை

Post a Comment