Friday, November 27, 2015

நரகமாகிவரும் சொர்க்கம்

ஆடைகளை
பகட்டும் நாகரீகமும் தீர்மானிக்க
நொந்து நூலாகிப்போகிறது உடல்

உணவினை
நாவும் மனமும் தீர்மானிக்க
வெந்துச் சாகிறது குடல்

செயல்பாடுகளை
உணர்வும் ஆசையும் தீர்மானிக்க
பாடய்ப்படுகிறது அறிவு

தேவைகளை
விளமபரங்களும் கௌரவங்களும் தீர்மானிக்க
ஓடாய்த் தேய்கிறது செழுமை

தொடர்புகளை
பயனும் "பசையும்" தீர்மானிக்க
போலியாகிப் போகிறது நட்பு

காதலை
சந்தர்பங்களும் காமமும் தீர்மானிக்க
கண் கலங்கி நிற்கிறது இல்வாழ்வு

வெற்றியினைப்
பணமும் ஜாதியும் தீர்மானிக்க
கேலிக் கூத்தாகிறது தேர்தல்

நியாயத்தை
பதவியும் செல்வாக்கும்  தீர்மானிக்க
இறந்து கொண்டிருக்கிறது தர்மம்

மொத்தத்தில்

தீர்மானம் செய்ய வேண்டியவைகள் எல்லாம்
செயலிழந்து கிடக்க

கேடுகெட்டவை எல்லாம்
அரியனையேறிச்  சிரிக்க
நரகமாகிக் கொண்டிருக்கிறது....

சொர்க்கமாய் இருக்கவேண்டிய
நம் சுக வாழ்வு 

10 comments:

Anonymous said...

Super

KILLERGEE Devakottai said...

நல்ல ஒப்பீடு கவிஞரே ரசித்தேன்
தமிழ் மணம் 2

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
நல்ல கருத்தை பகிர்ந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்... த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

யதார்த்தம் அழகான கவிதையாக.நன்றி.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
உண்மை
நன்றி ஐயா
தம +1

திண்டுக்கல் தனபாலன் said...

சரி தான்...

G.M Balasubramaniam said...

தீர்மானம் செய்ய வேண்டியது எது யார் என்றும் கூறி இருக்கலாமோ

Ghayal said...

Nice article. Thanks.

Unknown said...

உண்மைதான் இரமணி

Anonymous said...

நல்ல தொகுப்பு.
சிந்தித்தேன்.

Post a Comment