Monday, February 15, 2016

நமைச்சல்..

தனித்துக்  காட்டவா  ?
உயரம் கூட்டிக் காட்டவா ?

எப்போதும் பசி வெறியில் திரியும்
தன்முனைப்பு ஓநாய்க்கு விருந்தளிக்கவா ?

கும்பலுக்குள்  ஓர் அடையாளம் தேடியா ?

மன முதுகின் அழுக்கெடுக்க சில
நகங்கள் கொண்ட கைகள் தேடியா ?

யதார்த்தப் புறவெளிக் கஞ்சி
குகைக்குள் பதுங்கும் கோழைத்தனமா ?

செயலற்ற தன்மைக்கு வாங்கும்
கௌரவ வக்காலத்தா ?

அறிந்தவைகள் தெரிந்தவைகள்
செரிக்காது எடுக்கும் வாந்தியா ?

புண் மறைக்கப் போடும் பட்டுச் சட்டையா ?

போனபின் சொல்வதற்கு ஒரு
சிறப்புத் தகுதி வேண்டியா ?

நமைச்சலுக்கான காரணம் தெரியாவிடினும்
சொறியாது இருக்க முடியவில்லை
எப்படி யோசித்த போதும்
ஒரு காரணமும் தெரியவில்லை

ஆனாலும்
எழுதாது இருக்க முடியவில்லை

2 comments:

sury siva said...

ஹி ...ஹி ....

எங்கேயோ எழுதவேண்டிய பின்னூட்டம்
இங்கே வந்ததோ ?

புரியல்லையே !!

இருந்தாலும் நமைச்சல் எரிச்சலுடன் இருந்தால்,
இருக்கிறது ஒரு வைத்தியம்.
பரவாது ஒரே இடத்தில் இருந்தால்
ஒரு வைத்தியம்.
பரவி விட்டாலோ இன்னொரு வைத்தியம்.
பட்டை பட்டையாக தடித்தால்
பார்க்கவேண்டும் உடனடி வைத்தியம்.

காலடிரில் லோஷன் நமைச்சல் படும் இடத்தில் போடவும்.
உடல் முழுவதும் இருந்தால்,
அல்லர்கான் மாத்திரை 1-0-1
க்சைசால் 0-0-1
மருத்துவர் தருவார்.
மூன்று நாள் சாப்பிட்டபின் போகாவிடின்,
தன்வந்திரி கோவிலுக்குச் சென்று
அஷ்டகம் படிக்கவும். தன்வ்வந்திரி
மஹா மந்திர ஜபம் செய்யவும்.
சுக்கு, மிளகு, கிராம்பு, வெண்ணை கலந்த
நைவேத்யம்
நைன் டேஸ் க்கு செய்யவும்.

சுப்பு தாத்தா.


Yaathoramani.blogspot.com said...

sury Siva //

சமீபத்தில் தோல் நமைச்சலுக்கு வைத்தியம்
பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்
இல்லாவிட்டால் இவ்வளவு துல்லியமாக
விரிவாக எழுத முடியாது

உடன் வரவுக்கும் விரிவான பயனுள்ள
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Post a Comment