Thursday, February 25, 2016

எதிர்மறையே எப்போதும் முன்னே வா...

பசியே வா.....

ஊழிக்கால நெருப்பாய்
குடல் முழுதும் பரவி
முற்றாக என்னை எரி

எனக்கு ருசியின் அருமையை
முழுமையாய் ருசிக்க வேண்டும்

பிரிவே வா......

இதயத்தோடு
இரண்டறக் கலந்தவைகளையெல்லாம்
கிழித்துத் தூர எறி

நான அன்பின் ஆழமதை
அணுஅணுவாய் ரசிக்க வேண்டும்

பகையே வா......

உன் போர்த்தந்திரங்களையெல்லாம்
வெறியோடு பயன்படுத்தி
என்னை நிர்மூலமாக்க முயற்சி செய்

இருக்கும் பலம் போதாது
நான் இன்னும் பலம் பெற வேண்டும்

அஞ்ஞானமே வா.....

நீர் மறைத்த நிலமாய்
ஞானத்தை என்னிடமிருந்து
முற்றாக மறைத்துவை.

அசுர வெறியோடு தேடிப் போராடி
நானாக பூரணமாய்  அடைதல் வேண்டும்

எதிர்மறையே வா......

பகலுக்கு முன்வரும் இரவாய்
சுகத்திற்கு முன் வரும் துயராய்
எப்போதும் நீயே முன்னே இரு

நேர்மறையின் அருமையையும் பெருமையையும்
உனைவைத்தே நான் முழுமையாய்உணர  வேண்டும்

10 comments:

தனிமரம் said...

ஒவ்வொன்றும் ஒவ்வொரு வரம் போல அனுபவிப்பதும் ஒரு சுகமே. கவிதை அருமை ரசித்தேன் ஐயா!

Unknown said...

கவிந்த நன்று

Unknown said...

கவிந்த நன்று

மீரா செல்வக்குமார் said...

எல்லாவற்றோடு உங்கள் கவிதையும் வரட்டும்... அருமை..

G.M Balasubramaniam said...

ஊழிக்காலத்தில் நெருப்பா . எதிர் மறை வந்து விட்டதோ ?

திண்டுக்கல் தனபாலன் said...

தேடுதலும் போராடுதலும் என்றும் தேவை...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வலிப்போக்கன் said...

வா..என்றால் வந்துவிடுமா...?? போ...என்றால் போய்விடுமா...??? அய்யா...

வலிப்போக்கன் said...

வா..என்றால் வந்துவிடுமா...?? போ...என்றால் போய்விடுமா...??? அய்யா...

Yaathoramani.blogspot.com said...


வலிப்போக்கன் - //

ஒளிபடைத்த கண்ணினாய் வா வா
என்றாரே அப்படியானால் அது வராதா ?

நம் எதிர்பார்ப்பினைச் சொல்கிறோம்
அவ்வளவே .. வாழ்த்துக்களுடன்..

Post a Comment