Friday, March 25, 2016

ஓட்டுக்குத் துட்டு

ஓட்டுக்குத் துட்டு
துட்டுக்கு ஓட்டு
நாட்டுக்குக்கும் வீட்டுக்கும் கேடு-நம்ம
வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு

வேரறுத்து வென்னீ
ஊத்திவிட்ட மரமா
ஊருலகு ஆகவேணாம் மச்சான்-காரணமா
நாமளுமே ஆகவேணாம் மச்சான்

ஆண்டப்ப கோடி
அடிச்சவன் எல்லாம்
மீண்டுமதைச் செய்யவே தாரான்-நம்மை
முட்டாளா நினைச்சே தாரான்

புதுசா தேர்தலில்
புகுர்ரவன் கூட
விதைப்பதா நினைச்சே தாரான்-நாளய
விளைச்சல  நினைச்சே தாரான்

கொம்பின விட்டு
வாலினைப் பிடிச்சா
நொந்துதான் போகணும் மச்சான்-நாளும்
வெந்துதான் சாகணும் மச்சான்

காசெடெத்து  எவனும்
வாசப்படி வந்தா
பூசபோட ரெடியாகு மச்சான்-நானும்
புகுந்து ரெண்டு போடறேனே மச்சான்

7 comments:

Anonymous said...

good one sir

தனிமரம் said...

அருமையான கவிதை ஐயா.

Anonymous said...

ஆஹா! என்ன அருமையா மண் வாசனை வீசுதுஜி உங்க கவிதைப் பொழிவுல. அப்படியே கரிசக்காட்டுல கோடைமழை கொட்டுன மாதிரி ஒரு மண் வாசம் வீசுதுஜி. எப்படிஜி இப்படி யோசிக்கிறீங்க. நீங்க ஒரு ஜீனியஸ்ஜீ. இதுக்கு ஒரு ட்யூன் போட்டா செம்ம ஹிட்டாகும்ஜி. பாத்துஜி, காப்பிரைட் வாங்கி வச்சுக்கங்க, இந்த சினிமாக்காரனுங்க காப்பியடிச்சாலும் அடிப்பானுங்க. இன்னொரு ஆஹாஜி!

Unknown said...

அழகான, ஆழமான ஓர் உள்ளக்குமுரல்.

Unknown said...

அழகான, ஆழமான ஓர் உள்ளக்குமுரல்.

G.M Balasubramaniam said...

பேசாமல் கொடுக்கும் துட்டை வாங்கிக் கொண்டு நம் விருப்பப்படியே ஓட்டுப் போடவேண்டும் நாம் ஏன் ஏமாறவேண்டும்

Yarlpavanan said...

ஓட்டுக்குத் துட்டு
துட்டுக்கு ஓட்டு - இது
வீட்டுக்கும் ஆகாது - நம்ம
நாட்டுக்கும் உதவாது - ஆக
மொத்தத்தில
எல்லோருக்கும் கேடு!

Post a Comment