Wednesday, March 29, 2017

திருமங்கலமும்..ஆர்.கே நகரும்

பிரியாணிக்குச் சரியாகி
துட்டுக்கு ஓட்டு என்றாக்கி
தமிழக தேர்தல் அகராதியில்
"திருமங்கலம் ஃபார்முலா"என ஓர்
அமங்கலச் சொல்லை
அரங்கேற்றிய அசிங்கம் இன்னும்
நாறிக்கொண்டே இருக்கிறது

எத்தகைய கொடிய சாபமெனினும்
விமோட்சனம் என ஒன்று
நிச்சயம் உண்டு

எத்தகைய கொடிய நோயாயினும்
அதனைத் தீர்க்க மருந்தொன்று
நிச்சயம் உண்டு

அதற்கொரு காலச் சூழலும்
கால அவகாசமும்
நிச்சயம் வேண்டும்

அது இப்போது
ஆர்.கே நகருக்கு வாய்த்திருக்கிறது

"செய்வீர்களா..செய்வீர்களா "
என புரட்சித் தலைவி
கேட்ட கேள்விக்கு நல்ல பதிலாக

"வைத்துச் செய்ய ஒரு
நல்ல வாய்ப்பை
தேர்தல் ஆர்.கே நகர மக்களுக்கு
அழகாய்த் தந்திருக்கிறது

ஆர். கே நகர்
அரசியல் முதிர்ச்சியில்
டி.கே என்றாகுமா ?

ஆர்.கே நகர்
தரும் தீர்ப்பினில் தமிழகம்
ஓ.கே என்றாகுமா ?

திருமங்கல்ம் ஃபார்முலா எனும்
ஒரு அவச் சொல்லுக்கு
மாற்றுச் சொல்லாக

ஆர்.கே நகர்ஃபார்முலா எனும்
ஒரு மங்கலச் சொல் ஒன்று
இனிதே அரங்கேறுமா ?

கேள்விகளுக்கு
நல்ல பதில் வேண்டி

ஆர்வமுடனும்
ஆசையுடனும்
உங்களைப்போலவே
நானும்.....

4 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஆர்.கே நகர்ஃபார்முலா எனும் ஒரு மங்கலச் சொல் ஒன்று இனிதே அரங்கேறுமா?//

நியாயமானதொரு ஆசைதான் உங்களுக்கு!

ஆர்வமுடனும் ஆசையுடனும் உங்களைப் போலவே நானும் + எல்லோரும்.

Kasthuri Rengan said...

நானிலம் வேண்டுவது நல்ல பதில் ..
ஆனால் என்ன நடக்குதுன்னு காத்திருந்துதான் பார்க்கணும்
தம

Avargal Unmaigal said...

இருந்தாலும் உங்களுக்கு ரொம்பவேவேவேஏஏஏஏஏஏஏஏஏஏஏ ஆசைதான்

G.M Balasubramaniam said...

62 வேட்பாளர்கள் என்பது எதையோ குறிக்கிறதோஓட்டுச் சிதறலால் யார் பலன் அடைவார்கள் பார்க்கவேண்டும் நம் மக்களை நம்ப முடியாது

Post a Comment