Friday, August 4, 2017

.....போக்கு மா நிலம்

முன்பு ஒரு காலத்தில் மத்திய அரசில்
தமிழகத்திற்கென ஒரு கேபினெட்
அந்தஸ்துள்ள மந்திரி கூட
இல்லாத காலம் இருந்தது

அப்போது ஒரு இயக்கம் தமிழகத்திற்கு
கேபினெட் அந்தஸ்துள்ள மந்திரிகள்
பெறும் தகுதி இல்லையா என தமிழகம்
எங்கும்  சுவர்ப் பிரச்சாரம் செய்த ஞாபகம்
இப்போதும் இருக்கிறது

அதே போல இப்போது அடுத்துள்ள
யூனியன் பிரதேசத்திற்குக் கூடத் தனியாக
துணை நிலைய ஆளுனர் இருக்க
நம் தமிழ் நாட்டுக்கு மட்டும் தனியாக
ஆளுநர் இல்லாமல் கூடுதல் பொறுப்பிலேயே
இருப்பது .......

(அதுவும் அரசியல்  அநாகரிகங்கள்
மிக மிக அதிகமாக அரங்கேறிக் கொண்டிருக்கும்
மிக மிக அவசியமான இந்தச் சூழலில் )

இம்மாநிலம் ஒரு .....போக்கு
மாநிலமாக மத்திய அரசால் மதிக்கப்படுகிறதோ
என்கிற ஒரு மோசமான எண்ணத்தைத்
தோற்றுவிப்பதைத் தவிர்க்க இயலவில்லை

(கிராமங்களில் ஒன்றுக்கும் லாயக்கற்றவனை
இப்படிச் சொல்லித்தான் கண்டு கொள்ளாமல்
விட்டுவிடுவார்கள் )

எது எதற்கோ எப்படியெல்லாமோ
விளக்கம் சொல்கிற தமிழக பி.ஜெ.பி
முக்கியஸ்தர்கள் இதற்கும் நாம்
இரசிக்கும்படியாகவோ அல்லது
திகைக்கும்படியாகவோ (கேஸ் மானிய
ஒழிப்பிற்கு மேடம் சொன்னமாதிரி )
விளக்கம் சொல்வார்களா ?

அல்லது தலைப்பில் சொன்னது
ஒருவேளை சரிதான் எனும்படியாக
இது குறித்துத் தொடர்ந்து மௌனச் சம்மதம்
தெரிவிப்பார்களா ?

13 comments:

SrinivasaSubramanian said...

உண்மைதான்... தமிழகம் அப்படித்தான் மாறிவிட்டது....

தி.தமிழ் இளங்கோ said...

சரியான கேள்வி அய்யா. தமிழ்நாட்டிற்கு என்று கவர்னர் என்று ஒருவர் இருக்கின்றாரா என்று தெரியவில்லை.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கேள்வி....

தமிழகத்தின் நிலையை என்ன சொல்ல!

த.ம. மூன்றாம் வாக்கு....

Unknown said...

கேள்வி நன்று!த ம 4

ராஜி said...

தலைப்பு நச்ப்பா

தம 6

Selvadurai said...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்பது எத்துனை உண்மை!! தங்களின் சுயநலத்தால் ஊழல் செய்து பெரும் பொருள் ஈட்டிய தமிழக அரசியல்வாதிகள் தங்களையும் தங்களின் சொத்துக்களையும் பாதுகாத்துக்கொள்ள தமிழகத்தின் அனைத்து நலன்களையும் மத்தியில் அடகு வைத்துவிட்டனர். இவைகளை யார் மீட்பது?? அனைத்தும் சுயநலத்தின் விளைவே!!

Unknown said...

கவர்னர் என்றால் மத்திய அரசின் ஏஜென்ட் என்பார்கள் !அப்படிப்பட்ட ஒரு ஆமாம் சாமியைக் கூட நியமிக்க தேவையில்லாத அளவுக்கு தமிழகத்தின் நிலை தாழ்ந்து விட்டது :)

Seeni said...

நல்ல கேள்வி

ஸ்ரீராம். said...

கேள்விகளை யார் காதில் வாங்கிக்கொள்கிறார்கள்!

தம 7

G.M Balasubramaniam said...

தனியாக கவர்னர் இருந்தால் மட்டும் என்ன வாழப்போகிறது இன்னொரு மைய அரசின் பப்பெட்

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

நீங்கள் சொல்வது சரி
இருந்தாலும் நமக்கென ஒரு பப்பெட்
இருக்கக் கூடாதா ?

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். //

இருந்தாலும் ஊதுகிற சங்கை ஊதி வைப்போம்
எத்தனைக் காலம் தான் செவிடர்களாக
நடிக்க முடியும்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பல கேள்விகளுக்கு விடை நமக்கு கிடைக்கவே கிடைக்காது.

Post a Comment